Popular Posts

Friday, 20 January 2012

யாரோ போல் ஆக வேண்டும்
என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள்
நீங்கள் ஏற்கனவே ஒரு "மாஸ்டர் பீஸ்தான்" .
இதை வேறு எப்படியும் உங்களால் நிறைவு
செய்துவிட முடியாது #ஓஷோ

காதல்

நறுக்க நறுக்க
வளரும் சிறகு காதல்

துணை

நீண்ட தூரப் பயணத்தின்
தனிமை குறித்து எவரிடம்
விசாரிக்குமோ?
என் அருகின் காலி
இருக்கையில் வந்தமர்ந்து
கொள்கிறது அவள் நினைவு  !

தன்னை பார்த்து சிரிக்க கற்று
கொள்ளும் மனிதன்  அடுத்தவர்களிடம்
கடுமையாக நடந்து கொள்ள மாட்டான் # ஓஷோ

Saturday, 14 January 2012

இறுதியாக கேட்டுச் செல்!


வேண்டும் என்று
எமை விரட்டி வரும்
வேண்டாத வேதனைகள்!

ம்…!
பிரிவுகள் என்பது
உனக்குள்ளும் எனக்குள்ளும்
இறுதிவரை இல்லை
என்றுதானே இருவரும்
இறுமாப்புக் கொண்டிருந்தோம்…?

இதற்குள் எப்படி
இருவரையும் மீறி
இப்படி ஒரு பிரிவு…?

ஓ…!
என் மனதை
புரிந்து கொள்ளாமல்…

பூ மீது
ஆணி அடிக்கும்
வலியை தந்து
பிரிந்து செல்கிறேன் என்கிறாய்!

ம்… சரி
பிரியப் போகும் இவ்வேளையில்
ஒன்று சொல்கிறேன்
இதையும்
இறுதியாக கேட்டுச் செல்!

பிரிவு என்பது
எனக்கும் உனக்கும் மட்டும்தான்
நம் காதலுக்கு அல்ல



பார்த்து பழகும் காலம் பருவக்காலம்...
பல்லாயிரம் இளஞர்கள் வாழ்கை அமையும் காலம்..
பட்டு போகும் காதலில் நம்மை பரவசம் அடையும் காலம்..
பருவ பெண் கண் பார்வையால் நம்மை
பாடாய் படுத்தும் காலம் பார்த்து பழகுங்கள் .
இல்லையேல் வீணா போகும் உங்கள் ஆயுட்காலம்......
வரம் ஒன்று தந்தான்
இறைவன் இலவசமாக
அழுகையும் கண்ணீரையும்